Friday, February 15, 2013

காதலர் தினம்


Feb 14(2013) அன்று வெற்றிகரமாக மகிழ்ந்து கொண்டாடி `காதலர் தினத்தை’ நினைவுப்படுத்திய காதலர்களுக்கும்...
அதை கலாச்சார சீரழிவு என்று எதிர்பின் மூலம் `காதலர் தினத்தை’ உயிர்பித்த எதிர்ப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
உலகில் மற்றவைகளை பற்றி நமக்கும் என்ன அக்கறை? 

அடுத்த Feb 14(2014)க்கு இன்னும் 365 நாட்களே உள்ளன... அதனால் காதலர்களே கொண்டாட தயாராகுங்கள்... எதிர்பாள்ர்களே நீங்கள் எதிர்க்க தயாராகுங்கள்...
க...க...க... போ...




Wednesday, February 13, 2013

ஊடகங்களிலும் சினிமாக்களிலும் காதலை...

காதல், சினிமா, கிரிக்கெட்...
இதைத் தாண்டி உலகம் மிகப்பெரியது... எங்கள் வாழ்க்கையும்...
ஊடகங்களிலும் சினிமாக்களிலும் காதலை தவிர்த்து வேறு ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்..
(நீங்கள் எதை காமித்தாலும் அதுவே உண்மை என்றும், அதையே கொஞ்சம் அழுத்தி சொன்னால் அதுவே எங்கள் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்பவர்கள் நாங்கள்...)

’காதல்’ ஒரு சிறந்த உணர்வு... சிறந்த சொல்... விலைமதிப்பற்றது... எல்லாவற்றிற்கும் மேலானது...
ஒப்புக்கொள்கிறேன்...
ஆனால் அந்த விலை மதிப்பற்றதை திரும்பும் திசையெங்கும் ஒவ்வொரு வீடுகளிலும், தெருக்களிலும் ஓட விடாதீர்கள்... பின் சாக்கடைக்கும் காதலுக்கும் வித்தியாசம் இல்லை...
சராசரியாக 60 வருடம் வாழும் வாழ்க்கையில் வெறும் வாலிப பருவத்தில் வெளிப்படும் ஒரு உணர்ச்சி... எதிர் பாலினத்தின் மேல் ஏற்படும் ஓர் ஈர்ப்பு அவ்வளவே! நாம் வாழ்நாளில் அதிகபட்சமாக 10 வருடங்கள் வேண்டுமானல் இந்த காதல் நம்முடன் இருக்கலாம்... பின்னர் அது இருக்காது... இந்த உலகத்தில் நாம் பார்த்து, ரசித்து, அனுபவித்து, பகிற வேண்டியவைகள் ஏறாலம்... அதை வெறும் காதல் என்ற சொல்லைக்கொண்டு மறைக்காதீர்கள்!
அன்பு... மனிதநேயம்... இரக்கம்... பாசம்... உறவுகள்... நண்பர்கள்... சொந்தங்கள்... குடும்பம்... விட்டுகொடுத்தல்... சகிப்புதன்மை... பகிர்ந்துகொள்ளுதல்... போன்ற எண்ணற்ற விஷயங்கள் நம் வாழ்வில் இருக்கிறது.... அதையும் ஊடகங்களிலும்... சினிமாவிலும் காமியுங்கள்...

நீங்க ஊரெங்கும் பரவவிட்ட இந்த ‘காதல்’ என்ற சொல்லிற்க்கு அர்த்தம் தெரியாமல், பலர் எதிர்பாலினத்தின் உடல் மேல் ஏற்படும் ஈர்பை... இச்சையையும் கூட ‘காதல்’ என்று எடுத்துக்கொண்டு வெறிபுடித்து திரிகின்றனர். உங்கள் சுயநலத்திற்க்கு காதலை சாக்கடையில் விட்டீர்கள்...
விலைவு பல மனித பலிகள்...
அப்படி ஒரு வெறியனின்... வெறிபுடித்த வெளிப்பாடே ‘விநோதினி’ யின் மரணம்....
விநோதினி
இன்று தன் குடும்பத்தில் முதல் பட்டதாரியான விநோதினியின் குடும்பத்தினரின் நிலை...? அந்த ஏழை அப்பாவின் கணவு?
இப்படி எங்களிள் பலரின் கணவுகளும்... வாழ்க்கையும்.... எல்லாம் நீங்கள் பூதாகரம் ஆக்கிய ‘காதல்’ என்ற பூதத்திற்கு காணிக்கையா...? 

Sunday, August 7, 2011

எழுத்தில் என் முதல் முயற்சி...


உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...



என்றும் நட்புடன்...


    இவ்வுலகின் சிறந்த சகோதரார்கள் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது ராமன்-லட்சுமனன்.

  காதலர்கள் என்றால் லைலா-மஜ்னு, சலீம்-அனார்கலி, அம்பிகாபதி-அமராவதி என்று என்னற்ற ஜோடிகள் நம் கண் முன் வந்து மறைகின்றனர்.

   கணவன் மனைவி என்றால் ஆதாம்-ஏவாளில் ஆரம்பித்து ராமன்-சீதை, சத்யவான்-சாவித்ரி, மார்க்ஸ்-ஜென்னி என்று பலர் நம் நினைவுக்கு வருகிறார்கள்.

      ஆனால், உண்மையான-சிறந்த நட்பு அல்லது நண்பர்கள் என்று சொன்னால் நம் மூளையைப் பிசைந்தாலும் எவரது பெயரும் உடனே சிக்குவதில்லை. சிலநேரங்களில் நமது நட்பு, கூட ஞாபகமிருப்பதில்லை. ஏன், நட்பு இந்த உலகில் இல்லை என்பதாலா? இல்லை. நட்பு இருக்கிறது எண்ணில் அடங்காத அளவிற்கு நட்பு உள்ளது.

      ஆகையால், எதைக் கூறுவது என்று நமக்குத் தெளிவில்லை.

  ஆனால், இதோ ஒரு உண்மையான நட்பு. மார்க்ஸ் கணவன்-மனைவி உறவுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மார்க்ஸ்-ஏங்கல்ஸ் உறவு. வெகு சிலருக்கே பரிச்சயமானது இந்த நட்பு. நட்பு தன்னை பிரகடனம் செய்வதும் இல்லை; தன்னை மண்ணுள் புதைத்துக் கொள்வதும் இல்லை. அது தன் இயல்பு மாறாமல் நண்பர்கள் இறந்த பிறகும் ஏதோ ஒரு வகையில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நட்பு மார்க்ஸ்-ஏங்கல்ஸ்க்கு இடையில் இருந்தது. அவர்களுக்குப் பின்னரும் பல வடிவங்களில் சுற்றிக் கொண்டே இருக்கிறது நட்பு. அவர்களின் நட்பை ஒருபக்கம் கூட சொல்லத் தேவையில்லை; சில வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.

அது இன்றைக்கு வெகுவாக இருக்கும்
போலியான நட்பைப் போன்றதில்லை
எதிர்பார்க்கும் நட்பைப் போன்றதில்லை
சுயநல நட்பைப் போன்றதில்லை
அது வெறும் ' நட்பு ' அவ்வளவே.

   இந்த நட்பு ஒரு புத்தகதில் இருந்து எனக்குள் ஊடுருவியது. இப்போது என்னுள் இருந்து, இன்று என் கணினியில் நுழைந்து வலைதளம் வழியே இங்கு தவழ்கிறது. பிறகு இங்கிருந்து உங்களின் புலண்கள் வழியே உங்கள் மூளையை தொட்டு மனதில் சிம்மாசனம் இட்டு உட்காருகிறது. பின்னர் அங்கிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேறி வேறு ஒரு உருவம் பெறுகிறது. இப்படி தன்னை உயிருடன் வைத்துக்கொள்கிறது இந்த நட்பு.

    இப்படியும் நட்பை உயிரோட்டம் பெறச்செய்யலாமோ?

    சரி! இன்றைய சூழ் நிலைக்கு இப்படியாவது நட்பை உணருவோம்.

Blog Archive

Followers